தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்துள்ளார். 

கடந்த 20-ம் தேதி அதிகாலை தலைமை செயலகத்தில் ஓ.பி.எஸ் அறையில் சிறப்பு யாகம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். 

இதற்கு பதிலடியாக யாகம் நடத்தினால் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றால் எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்துவார்கள் ஒன்று விமர்சனம் செய்திருந்தார். மேலும் யாகம் நடத்தவில்லை சாமிதான் கூம்பிட்டேன் என்றும் விளக்கமளித்தார்.  

இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் அலுவலகங்களில் மதச்சடங்கு நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மீறி யாகம் நடத்தியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் மதச்சடங்கு நடத்தக் கூடாது என அரசு உத்தரவுகள் உள்ள என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் யாகம் நடத்த அனுமதி வழங்கிய தலைமைச்செயலாளர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் கூறியுள்ளார்.