மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா வைரஸங தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள எக்ரா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமரேஸ் தாஸ் (76). கடந்த மாதம் கொரோன அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், எம்எல்ஏவின் உடல்நிலை ஜூலை 24ம் தேதி மோசமடைந்தது. 

அதன்பிறகு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். இவரின் மரணத்துக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஜூன் மாதம் திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.எல்.ஏ தாமனோஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.