Asianet News TamilAsianet News Tamil

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பங்கீடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை..!! கேரளா விரைந்த தமிழக அதிகாரிகள்..!!

அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

Second phase of river water sharing talks between Tamil Nadu and Kerala, Tamil Nadu officials rush to Kerala
Author
Chennai, First Published Sep 10, 2020, 12:58 PM IST

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தமிழகம் கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

Second phase of river water sharing talks between Tamil Nadu and Kerala, Tamil Nadu officials rush to Kerala

அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடைப்பெற்றது. அந்த பேச்சுவார்த்தையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Second phase of river water sharing talks between Tamil Nadu and Kerala, Tamil Nadu officials rush to Kerala

இந்நிலையில் இந்த குழுவின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக குழு கேரளா சென்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில்,ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு குறித்தும், கோவை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை பிரச்சனை குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios