சீமானால் எனக்கு ஒரு புருஷன், ஃபேமிலி என்று இல்லாமல் இப்போது கஷ்டப்படுகிறேன் என நடிகை விஜயலட்சுமி மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், ‘’இயக்குனர் வேலுபிரபாகரன் இந்த சமுதாயத்திற்கு சீமான் போன்றவற்றில் நிச்சயம் தேவை என்று சொல்லி இருக்கிறார். விஜயலட்சுமி தேவையில்லை என்பது போல் அவர் சொல்லி இருக்கிறார். இது ஒரு சாதாரண விஷயம் என்கிறார். நீங்கள் வீடியோவில் பதிவிடுவதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? என்ன சந்தோஷம் கிடைக்கப்போகிறது? என்று கேட்கிறார்.

 பெண்கள் எல்லோரும் என் உணர்வுகளை புரிந்து கொள்கிறீர்களா? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று. ஒரு வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு வாதாட விடாமல் வாபஸ் வாங்க வைத்துள்ளார்கள். என்னை சாவடிக்க பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள். அதிலிருந்து காப்பாற்ற பட்டுள்ளேன். இதையெல்லாம் வேலுபிரபாகரன் உணர்வாரா? நான்கு மாதத்திற்கு முன்னால் சர்ஜரி செய்ய துடித்தேன். யாராவது ஒரு லட்சம் கொடுங்கள் சர்ஜரி செய்ய காசு இல்லை என்று கண்ணீர் வடித்தேன்.

 நான் ரஜினி சாரிடம் உதவி கேட்டேன். அது எனது இஷ்டம். ரஜினி சார் எனக்கு பிடிக்கும். அதனால் அவரிடம் கேட்டேன். அதை அசிங்கப் படுத்தினார்கள். எனது அம்மா அக்காவை வாழ வைக்க எவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு புருஷன், ஃபேமிலி என்று இல்லாமல் இப்போது கஷ்டப்படுகிறேன். எங்கேயாவது யாராவது அவரது தரப்பிலிருந்து இப்படியெல்லாம் நடந்து விட்டது சரி விட்டு விடுமா? என்று என்னிடம் கேட்கவில்லை. இதையெல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால், நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் தான். இறந்தாலும் எனது கடைசி உயிர் தமிழகத்தில்தான் மறைய வேண்டும்.

 நான் இறந்தால் என்னுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரும் வரவேண்டும். தவறு செய்திருக்கிற சீமானுக்கு பேசும்போது வருகிறார்கள். எல்லாவற்றையும் கடவுள் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு எனது வாய் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கடவுள் நிச்சயம் பதில் அளிப்பார்’’ என அவர் தெரிவித்துள்ளார்.