Seal deposit to Sterlite plant
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் சந்துப் நந்தூரி முன்னிலையில் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100-வது நாளில் அரசாங்கத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த அரசு அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பியதையொட்டி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் நிவாரணம் வழங்கினர்.
இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசு உத்தரவிட்டிருப்பது தூத்துக்குடி மக்களுக்கும் போராடியவர்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஸ்டெர்லைட் ஆலை மூட அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டது தொடர்பாக அரசாணையும் ஸ்டெர்லைட் கேட் வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். அப்போது நூற்றுக்கணக்கான போலீசார்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதைத் அடுத்து தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும், உடனடியாக இந்த ஆலையை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
