Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு.. பொங்கல் கழித்து பள்ளிகளை திறக்க உத்தரவு..

பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு வரும் 19-1-2021 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
 

Schools will be open only for 10th and 12th class students from the 19th. Tamilnadu CM Announced.
Author
Chennai, First Published Jan 12, 2021, 10:18 AM IST

வரும் 19  ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் பொதுமக்களின் ஒத்துழைப்பினாளும் தான் நோய்த்தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. 

Schools will be open only for 10th and 12th class students from the 19th. Tamilnadu CM Announced.

28-12-2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும்,மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தும், பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம், 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது. இக் கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு வரும் 19-1-2021 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

Schools will be open only for 10th and 12th class students from the 19th. Tamilnadu CM Announced.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios