கொரோனா தொற்றால் பள்ளி கல்லூரிகள் கோவில்கள் மால்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் நாளை உணவங்கள் டீகடைகள் 50சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி வழங்கி அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டிருக்கிறது. மாணவர்கள் படிப்பு விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தனியார் பள்ளிகளுகம் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகின்றன. தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்தும் பல தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணம் கட்டச்சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் பொக்ரியால் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மேலும் அப்போது பேசியவர்... 

"கொரோனா வைரஸ் ஊரடங்கால் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன.இதுவரைக்கும் நடந்து முடிந்த தேர்வுகளின் அனைத்து முடிவுகளையும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அறிவிக்க நிர்வாகம் முயற்சிக்கிறது.அதே நேரத்தில் பள்ளிகள் செப்டம்பர் மாதம் திறக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நிலுவையில் உள்ள தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் நடத்தும். ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 12 வரை நடத்தவும் நீட் தேர்வை ஜூலை 26’ம் தேதியும், ஜேஇஇ தேர்வை ஜூலை 18 முதல்23 வரையும் நடத்துவதாக ரமேஷ் பொக்ரியால் முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.