தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போதைக்கு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு சற்றும் குறையவில்லை. நாளுக்கு நாள் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கல்லூரி படிப்புக்கான சேர்க்கை தற்போது தாமதமாக நடைபெற்று வருகிறது. 

இதை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என பெற்றோர்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டது. இது குறித்த ஒரு அறிவிப்பை தற்போது அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்:- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.