’கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்.  அதே சமயம் புயலின் பாதிப்பால் பாடப்புத்தகங்களை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கூடுமானவரை நாளை மாலைக்குள் பாடப்புத்தகங்கள் அனுப்பித்தரப்படும்’ என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கஜா புயல் கடந்த வெள்ளியன்று கரையைக் கடந்தது. இப்புயலின் பாதிப்பால் டெல்டா பகுதி மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் சீருடைகளும் நீரில் அடித்துச்செல்லப்பட்டு நாசமாகின. அப்பகுதி மானவர்கள் சில தங்கள் பாடப்புத்தகங்களை வரிசையாக வெயிலில் உலரவைத்த காட்சி காண்போர் நெஞ்சைக் கலங்கவைத்தது.

இந்நிலையில் ஒரு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு மாற்று சீருடையும், புத்தகங்களும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த அமைச்சர் செங்கோட்டையன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதால் டெல்டா பகுதிகளில் நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்படும். ஏற்கனவே அறிவித்தபடி நாளை மாலைக்குள் மாணவ,மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அற்வித்திருக்கிறார்.