Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பொது குழு தொடர்பான வழக்கு... விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரணையை டிச.15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

sc postpones hearing of case realted to admk general committee
Author
First Published Dec 12, 2022, 6:26 PM IST

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரணையை டிச.15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிா்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று உயா்நீதிமன்ற தனி நீதிபதி தீா்ப்பளித்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

இந்த வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்... கவனத்தை ஈர்த்த அறிவிப்பு பேனர்!!

கட்சி செயல்பட முடியாத நிலை உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார். ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தினால், வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு டிச.12க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய அலுவல் நேரம் முடிவடைந்ததால் வழக்கு டிச.15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios