Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை.. ஹரியான விரைகிறது புதுச்சேரி போலீஸ்.. சென்னையில் வந்து விசாரணை.

இந்த நிலையில் புதுச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனுக்கும், சவுகத் அலிக்கும் தொடர்புள்ளதா என்பதை விசாரிப்பதற்காக புதுச்சேரி கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான 4 போலீசார் சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு வந்தனர்.

SBI Bank ATM robbery .. Puducherry police rush to Haryana .. Arrive in Chennai and investigate.
Author
Chennai, First Published Jul 7, 2021, 10:50 AM IST

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய ஹரியானா கொள்ளையனிடம் புதுச்சேரி போலீசார் சென்னைக்கு வந்து விசாரணை நடத்தினர். புதுச்சேரி எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் புகுந்த இரு கொள்ளையர்கள் 2லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் திருடி தப்பி சென்றனர். இது குறித்தான சிசிடிவி காட்சியை வைத்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஹரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி சென்றது தெரியவந்ததையடுத்து அவனை தேடி வந்தனர். 

SBI Bank ATM robbery .. Puducherry police rush to Haryana .. Arrive in Chennai and investigate.

இதற்கிடையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் எஸ்.பி.ஐ ஏடிஎம் ஒன்றில் ஹரியானா கும்பல் கைவரிசை காட்டி 1 கோடி ரூபாய் வரை கொள்ளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜீப் ஹுசைன் மற்றும் கூட்டத்தின் தலைவனான சவுகத் அலி ஆகிய நான்கு பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக நேற்று சவுகத் அலியை பெரியமேடு போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனுக்கும், சவுகத் அலிக்கும் தொடர்புள்ளதா என்பதை விசாரிப்பதற்காக புதுச்சேரி கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான 4 போலீசார் சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு வந்தனர்.

SBI Bank ATM robbery .. Puducherry police rush to Haryana .. Arrive in Chennai and investigate.

காவலில் எடுக்கப்பட்டுள்ள சவுகத் அலியின் விவரங்கள் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் சேகரித்தனர்.மேலும் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் புகைப்படத்தை சவுகத் அலியிடம் காண்பித்த போது இவர் யார் என தெரியாது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சவுகத் அலியிடம் சுமார் 2 மணி நேரமாக விசாரணை நடத்திவிட்டு போலீசார் சென்றனர். சவுகத் அலியின் கூட்டாளி இல்லை என்பதால் புதுச்சேரி போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios