பெண்களை விமர்சித்து வீடியோ வெளியீடு..! சவுக்கு சங்கரின் ஆதரவாளர் நள்ளிரவில் அதிரடி கைது
குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை தொடர்பாக பெண்களை விமர்சிக்கும் வகையில், வீடியோ வெளியிட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் ஆதரவாளரான பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை
தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
BREAKING: திடீர் மூச்சு திணறல்? வென்டிலேட்டரில் ஈவிகேஎஸ் இளங்கோவன்? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
இதனையடுத்து திமுக தேர்தல் அறிக்கையின் போது அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்ததாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லையென அரசியல் கட்சிகள் விமர்சனங்கள் செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசின் அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில், நடிகர் கவுண்டமனி, செந்தில் நடித்த படத்தின் காமெடி காட்சிகளோடு ஒப்பிட்டு சவுக்கு சங்கரின் ஆதரவாளரும், வாய்ஸ் அப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் அக்கவுண்ட வைத்திருக்கும் பிரதீப் வெளியிட்டிருந்தார். இதே போல சவுக்கு சங்கரும் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் சவுக்கு சங்கரை கைது செய்ய கோரியும், அவரது டுவிட்டர் கணக்கை முடக்க கோரியும் உசிலம்பட்டியில் திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சவுக்கு சங்கர் ஆதரவாளர் கைது
இதே போல பெண்களை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் மகளிர் ஆணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதீப்பை சென்னை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு சவுக்கு சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நானும் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனேன் என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சவுக்கு சங்கர்... கைது செய்யக்கோரி திமுகவினர் புகார்!!