என்னது பாஜக ஐடி விங் தலைவர் சவுக்கு சங்கரா? அண்ணாமலை பெயரில் அறிக்கை? உண்மை நிலவரம் என்ன?
தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து பாஜக ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பாஜக ஐடி விங்க் தலைவராக யூடியூபர் சவுக்கு சங்கர், மாநில செயலாளராக பிரதீப் நியமனம் என்று போலியான அறிக்கை ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து பாஜக ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், தமிழக பாஜக ஐடி விங்க் தலைவராக அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநிலச் செயலாளராக பிரதீப் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது போன்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- அண்ணாமலையை அலறவிடும் அதிமுக.. நிர்மல் குமாரை தொடர்ந்து முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்..!
அண்ணாமலை பெயரில் வெளியான அறிக்கையில்;- தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள். கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளுங்கள், ஏற்கெனவே வெளியேறிவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டிய நிபந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படிஅயில், தமிழக பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் (வாயிஸ் ஆஃப் சவுக்கு சங்கர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என்றும் திட்டமிட்டே சில விஷமிகள் இதுபோன்று பரப்பி வருவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.