கொரோனா வைரஸ்  கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என கேரளாவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள செல்லனம் கிராமத்தை சேர்ந்தவர் எடக்ர் செபாஸ்டியன். 10ம் வகுப்பு படித்து வரும் இவரது கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பக அந்த மாணவன் ஜனாதிபதி ராம்நாத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘’எனது கிராமம் செல்லனம் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய யாரும் இல்லை. பயம் காரணமாக, இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எனக்கு, நினைவு தெரிந்தது முதல், ஆண்டிற்கு இரு முறை என்னையும், எனது சகோதரனையும் அழைத்து கொண்டு பெற்றோர் வேறொரு இடத்திற்கு ஓடுகின்றனர்.

கடல் அரிப்பு, மழை காலங்களில், கடல் தண்ணீர் எங்களது வீட்டிற்குள் வந்துவிடும். இந்த ஆண்டு ஜூலை 16 முதல் கடல் அரிப்பு ஏற்பட துவங்கியது. வழக்கம் போல் உறவினர் வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தாலும், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் முடியவில்லை.

எங்களது கிராமத்தை காக்க கடலோரத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கிராமத்தினர் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், உதவி செய்ய யாரும் இல்லை. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 6 வீடுகள் இடிந்து விட்டது. வீட்டில் இருந்த பொருட்களுடன், நானும், எனது நண்பர்களும் புத்தகங்களையும் இழந்துவிட்டோம். பருவமழை துவங்கிவிட்டதால், மீண்டும் கடல் அரிப்பு ஏற்படும். இந்திய எல்லையில் ஒன்றான, அரபிக் கடல் பகுதியில் படித்து வருகிறேன்.

எல்லைகளை காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உங்களுக்கு உள்ளது என நம்புகிறேன். எனது கடைசி நம்பிக்கையும் நீங்கள் தான். இதனால், இந்த விவகாரத்தில், நீங்கள் தலையிட்டு, கடல் சுவர் அமைக்க உதவுவதுடன், எங்களையும் காப்பாற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.