Asianet News TamilAsianet News Tamil

சனிக்கிழமையை ஞாயிற்றுக்கிழமை வென்றது... ஓ.பி.எஸ்- எடப்பாடியை விமர்சிக்கிறாரா ராமதாஸ்..?

 இந்த கமெண்ட் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், இது, ஓ.பி.எஸ் -எடப்பாடி குறித்து ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

Saturday won Sunday ... Is Ramadas criticizing OPS-Edappadi?
Author
Tamil Nadu, First Published May 11, 2021, 11:01 AM IST

அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Saturday won Sunday ... Is Ramadas criticizing OPS-Edappadi?

இதுகுறித்து, ‘’தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவரது பணி சிறக்க வாழ்த்தினேன்; அதற்காக அவர் நன்றி தெரிவித்தார்.’’என்று குறிப்பிட்டுள்ளார் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்.

Saturday won Sunday ... Is Ramadas criticizing OPS-Edappadi?

இந்நிலையில், இரண்டு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடை இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் மது பிரியர்கள் மதுவை வாங்கி குவித்தனர். இந்த இரண்டு நாளில் மட்டும் 855 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது.

டாஸ்மாக் கடைக்கு ஒருநாள் விடுமுறை என்றாலே முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். பெட்டி பெட்டியாக வாங்கி செல்வார்கள். ஆனால் இரண்டு வாரம் லீவு விட்டால் நிலைமை என்னாகும். நேற்று திங்கட்கிழமை 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்பதால், இரண்டு வாரத்திற்கான சரக்குகளை மொத்தமாக வாங்கி குவித்தனர் மது பிரியர்கள். கடந்த 8ஆம் தேதி அன்று 426 கோடியே 24 லட்சத்துகும், 9ஆம் தேதியன்று 428 கோடியே 69 லட்சத்துக்கும் என்று இரண்டு நாளில் மட்டுமே மொத்தம் 854 கோடியே 93 லட்சத்திற்கு மது விற்பனையாகி இருக்கிறது. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 199 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி, சேலம், மதுரை, கோவை என்று வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.Saturday won Sunday ... Is Ramadas criticizing OPS-Edappadi?
 
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், ’’தமிழ்நாட்டில் மது விற்பனை: சனிக்கிழமை – ரூ. 426 கோடி. ஞாயிற்றுக்கிழமை – ரூ.429 கோடி. சனிக்கிழமையை ஞாயிற்றுக்கிழமை வென்றது.’’என்று கமெண்ட் அடித்திருக்கிறார். இந்த கமெண்ட் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், இது, ஓ.பி.எஸ் -எடப்பாடி குறித்து ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios