ஆந்திராவில் செம்மரம் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் 'கட்டை பாஸ்கர்' கைது செய்யப்பட்டார். 

விவேக் ஜெயராமனின் மாமனாரை கட்டை பாஸ்கர் என்று அழைப்பது உண்டு. அவர் சர்ச்சைக்குரிய பிரமுகர். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.  அவர் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் வருமான வரித் துறை புலனாய்வு பிரிவினரால் தேடப்படும் குற்றவாளி என்று கூறப்படுகிறது. இளவரசியின் மகனான விவேக் மீது ஜெயலலிதாவுக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவர் கை குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர் என்பதால் கிட்டதட்ட விவேக் தனது வளர்ப்பு மகனாகவே ஜெயலலிதா பாவித்தார்.

 

விவேக் ஜெயராமனுக்கும் பாஸ்கரின் மகள் கீர்த்தனாவுக்கும் வானகரத்தில் திருமணம் நடைபெற்றது. வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தை போல் இதையும் கோலாகலமாக ஜெயலலிதா கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணமகளின் தந்தை பாஸ்கர் சர்ச்சைக்குரிய பிரமுகர் என்பதால் ஜெயலலிதா அந்த திருமணத்துக்கு போகாமல் தவிர்த்து விட்டார்.

அப்படிப்பட்ட கட்டைபாஸ்கர் மீது செம்மரம் கடத்தப்பட்டதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்கு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது