பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வான கே.ஜே.ஜேசுதாஸ். ஜக்கி வாசுதேவ், ஆகியோருக்கும், பத்ம பூஷண் விருது பெறும் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் குடும்பத்தினருக்கும் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற விளையாட்டு வீரர் மாரியப்பன், மிருதங்க இசைக்கலைஞர் டி.கே.மூர்த்தி, சமூக ஆர்வலர் நிவேதிதா ரகுநாத், மற்றும் மருத்துவ சாதனைக்காக விருது பெறும் மறைந்த சுனிதி சாலமன் குடும்பத்தினருக்கும் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா இந்த விருது பெற்றவர்களை வாழ்த்து தெரிவிக்கும் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
