பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாதம் 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை நீதிபதிகள் கேட்டிருந்தனர். அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்தார். சசிகலா தரப்பு வவழக்கறிஞர் கூறுகையில், ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளார். அவர் விடுதலையான பிறகு வழக்கு பற்றி அவரிடம் கூடுதல் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதில் அளிக்க விரும்புகிறோம்.

எனவே நீங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி, பிப்ரவரி 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். எனவே சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாவது உறுதியாகிவிட்டது என்று தெரிகிறது. இதனால், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.