Asianet News TamilAsianet News Tamil

மார்பில் முட்டும் வளர்த்த கிடா !!  பரோலில் வரும் சசிகலாவுக்கு  எடப்பாடி அரசு கொடுக்கும் கடும் நெருக்கடி !!!

sasikala will come to chennai with barole
sasikala will come to chennai with barole
Author
First Published Oct 6, 2017, 9:46 AM IST


கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  சென்னை மருத்துவமனையில் உள்ள நடராஜனை சந்திக்க, பெங்களூரு சிறையில் இருந்து இன்று அவரது மனைவி சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  சசிகலா பேராலில் வருவதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தியபோது, அக்கட்சியின் எம்எல்ஏக்களை  கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைத்து , அதிமுக அரசை காப்பாற்றியவர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா.

அப்போது  அமைச்சர் செங்கோட்டையனை , டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் முதலமைச்சராக முன்மொழிந்தபோது , சசிகலா மட்டும்  பிடிவாதமாக எடப்பாடி பழனிசாமியை  முதலமைச்சராக்கினார்.

இந்நிலையில்  சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

எடப்பாடி முதலமைச்சராக ஆன பின்பு கொஞ்சம், கொஞ்சமாக சசிகலா குடும்பதிதற்கு எதிராக செயல்படத் தொடங்கினார். டி.டி.வி.தினகரனை முற்றிலுமாக ஒதுக்கத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அவருக்கு எதிராக பல பிரோயகம் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் சசிகலாவின் கணவர் நடராஜனின், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் அவர் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பம் கொடுத்தார்.பரோல் விண்ணப்பத்தில் நடராஜனின் மருத்துவ சிகிச்சை ஆவணங்களை சசிகலா இணைக்கவில்லை. இதை காரணம் காட்டி, பரோல் விண்ணப்பத்தை கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்தது. பின் உரிய ஆவணங்களுடன் மீண்டும் மனு செய்யும்படி கேட்டுக் கொண்டது. ஒருவழியாக இந்த விவகாரத்தில் அரசியலைக் கலக்காமல், சசிகலா பரோலுக்கு தமிழக போலீஸ் துறை பச்சைக்கொடி காட்டியது.இதையடுத்து  இன்று  மாலை  சசிகலா பரோலில் வெளி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே பரோலில் வெளிவரும் சசிகலாவுக்கு  எடப்பாடி அரசு  கடும் கட்டுபாடுகள் விதித்திதுள்ளதாக  செய்திகள் வெளிவந்துள்ளன. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது, நடராஜனை மட்டுமே சந்திக்க வேண்டும், அரசியலு ரீதியாக  யாரையும் சந்திக்கக்கூடாது, அரசியல் கட்சியினரை சந்திக்கக்கூடாது  என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.   இந்த நிபந்தனைகள் தமிழக அரசின் ஆலோசனையின் பேரில் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலாவை தினகரன் கூட சந்திக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பல அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சசிகலாவை சந்திக்க காத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள எடப்பாடி தரப்பை கலங்கடித்துள்ளதாக தெரிகிறது.
Follow Us:
Download App:
  • android
  • ios