ஆகஸ்டு 18ம் தேதி சசிகலா 61வது பிறந்தநாள் காணும் சசிகலாவை அவருடைய அக்காள் மகனும், அமமுக துணைப் பொதுசெயலாளர்   தினகரன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது   தமிழ அரசியலில் ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து பல சாதனைகளை படைத்த, மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி   மறைவை அடுத்து கலைஞர் தன் உயிரினும் மேலாக நேசித்த அறிஞர் அண்ணாவின் சமாதி அருகே அவரை நல்லடக்கம் செய்ய விரும்பி மெரினாவில் இடம் கோரி இருந்தனர் திமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தார்.

அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி சட்ட சிக்கல் என காரணம் கூறி மறுப்பு தெரிவித்ததால் நீதிமன்ற சென்று வெற்றிபெற்றதாக தினகரன் சொன்னதற்கு அக்கா (ஜெயலலிதா) இருந்திருந்தால் கலைஞருக்கு இந்த கதி நடந்திருக்குமா என கோபப்பட்டாராம் சசிகலா.  


 
கலைஞருடைய மறைவுக்குப் பிறகு  நேற்றுதான்  சசிகலாவை பார்க்க சசி குடும்பத்தினர் சென்றனர்.  அப்போது‘கலைஞருடைய துக்க நிகழ்வுக்கெல்லாம் போனீங்களா? என தினகரனிடம் கேட்டாராம், கருணாநிதி   இறந்துட்டாரு  என்ற செய்தியை நம்ப முடியல.  எப்பவும் போல ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு திரும்பி வந்துடுவாருன்னு தான் நானும் அணியும் பேசிகிட்டு இருந்தோம்.  அன்றைக்கு நைட் 8 மணிக்கு சாப்பிடும் போதுதான் விஷயத்தை சொன்னாங்க. என்னால சாப்பிடவே முடியலை. அப்படியே எழுந்து வந்துட்டேன். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதே அவருதானே... பல தடவை அவரை நான் நேரில் பார்த்து இருக்கேன்...’ என கண்கலங்கினாராம். என்றெல்லாம் நீண்ட நேரம் கலைஞரைப் பற்றியே பேசியிருக்கிறார் சசி. கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த போன தகவல்களை எல்லாம் தினகரனும்  சொன்னாராம்.

அப்போது, மெரினாவில் கலைஞரை நல்லடக்கம் செய்ய, அண்ணா சமாதியின் அருகே மெரினாவில் இடம் வேண்டும். என்று தமிழக முதல்வர் எடப்பாடியிடம் திமுக அரசியல் தலைவர்கள், மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு சட்ட ரீதியாக தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் எனக்கூறி, அங்கு இடம் ஒதுக்க முடியாது என மறுத்திருக்கிறார் எடப்பாடி. இதனை தொடர்ந்து கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே கலைஞருக்காக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 


ஆனால் கலைஞரை அண்ணாவின் அருகே சேர்த்துவிட திமுகவினர் கடுமையாக போராடினர். இறுதியாக கோர்ட்டு சென்று திமுகவினர் வெற்றிபெற்ற தகவலை  சொன்னாராம் தினகரன்.  அப்போது கோபப்பட்ட சசிகலா‘அக்கா இருந்திருந்தால் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்திருக்காது, அவரு பெரிய தலைவர், 50 வருஷம் கட்சிய கட்டிக் காத்தவரு, அக்க அவருமேல மரியாத வச்சிருக்காங்க, கேட்டதும் அவருக்கு மெரினாவுல இடம் கொடுத்திருப்பாங்க.  இதுல கூடவா எடப்பாடி அரசியல் செய்யுறாரு? கேப்ட்பதற்க்கே கேவலமா இருக்கு. இவங்களை எல்லாம் நம்பியா நான்  மோசம் போய்ட்டேன்னு வேதனையாகவும் இருக்கு’ என பேசினாராம்.