Edappadi Palanichamy rknakar depot inaugurated in Chennai AIADMKs election.

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக தேர்தல் பணிமனையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் யார் போட்டியிடப் போகின்றனர் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

இதற்கான விடையை தேர்தல் ஆணையம் இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாகவும், நாளை மாலை முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப் போவதாகவும் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். 

இந்தச் சூழலில் ஆர்.கே.நகரில் அதிமுக தேர்தல் பணிமனையை டிடிவி தினகரன் முன்னிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், நிலோபர் கபிஃல், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதிமுகவின் இந்த பணிமனையில் இரட்டை இலை சின்னம் பொறித்த கொடி பறக்குமா என்பதற்கான விடை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்