sasikala team announced election volunteers list

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 152பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை சசிகலா தரப்பு அதிமுக நியமனம் செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைதேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக இரண்டாக பிளவடைந்து உள்ளதால் சசிகலா தரப்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்த விவாதம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதம் நிறைவடைந்துள்ளது.

இதனிடையே ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன் டி.டி.வி தினகரன் மீது கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை சசிகலா தரப்பு அதிமுக நியமனம் செய்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தினகரனின் அரசியல் சூடு பிடிக்கும். இல்லையேல் காற்று வெளியேறிய பலூன் போல அப்படியே அடங்கி விடும்.

பொறுத்திருந்து பார்ப்போம் அரசியலில் நிலைப்பாரா அல்லது பழையபடி ஊர் பக்கம் செல்வாரா என்று....