ஆா்.கே.நகா் எழில் நகரில் தினகரன் அணியை சேர்ந்த  முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஆர் நித்தியாணந்தம் என்பவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.

ஆர் கே நகர் தொகுதி ஒபிஎஸ் அணியின் சார்பில் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய எழில் நகரை சேர்ந்த 41-வது வட்ட கழக செயலாளர் நித்தியாணந்தம் என்பவர்  தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை சசிகலா ஆதரவாளரான ஈரோடு மாவட்ட செயலாளர் கே.பி ராமலிங்கம் வழிமறித்து அரிவாளால் வெட்டியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவருக்கு பலத்த அடி பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினகரன் அணியை சேர்ந்த  முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம் ஆா்.கே.நகா் எழில் நகரில் வாக்காளா்களுக்கு இலவச வீடு விண்ணப்பம் வழங்கியதால் பிரச்சனை முற்றியதாக தெரிகிறது.

மேலும், பன்னீர் அணியை சேர்ந்த யுவராஜ்,நித்யானந்தத்தை முன்னால் அமைச்சர் ராமலிங்கம் தாக்கியதாக புகார் கொடுத்த  நிலையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.