புதுசேரி மாநிலத்தின் திமுகவின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமாக இருந்த வி.எம்.சி சிவகுமார் காரைக்காலை அடுத்த நிரவி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனது சொந்த ஊரான திரு-பட்டினத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

காரைக்கால் பகுதியின் முக்கிய அரசியல்வாதி என்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. 144 தடை உத்தரவும் போடபட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் புதிய பொது செயலாளராக பொறுபேற்றுள்ள V.K.சசிகலா முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

VMC  சிவக்குமாரின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்ததாலும் சட்டத்தின் முன் நிற்கவைக்கப்பட்டு தண்டிக்கபடவேண்டுமென அவர் தனது அறிக்கையில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் பாண்டிச்சேரி பகுதி அதிமுக தொனடர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.