சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயரை தனி அறையில் 15 நிமிடம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் வெளியே வரவேண்டும், இந்த நாட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- சசிகலா ரிலீஸாக வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை... ஓபிஎஸை அலறவிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

இந்நிலையில், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளரும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக திருவேற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் காலியாக இல்லை. சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சி என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் சட்டரீதியாக அணுகப்படும் என்று தெரிவித்துள்ளார்.