சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர், வெளியே வந்தால் மகிழ்ச்சி என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சசிகலா நன்னடத்தை விதிகள் அடிப்படையில் பிப்ரவரியில் சசிகலா வெளியே வர வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;- சசிகலா தெய்வத்தின் முன் நிரபராதி... ஓ.பி.எஸை அதிரவைக்கும் ராஜேந்திர பாலாஜி..!

இந்நிலையில், சசிகலா விடுதலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர், வெளியே வந்தால் மகிழ்ச்சி. சசிகலா விரைவில் சிறையிலிருந்து வரவேண்டும் என்பதே தனது பிரார்த்தனையாகும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், கோயில் இடங்களில் அமர்ந்து இந்து மதத்தை தவறாக பேசுவோரை வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம் என்றார்.

ஏற்கனவே சசிகலா சிறையிலிருந்து அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றோரின் எண்ணம். அவர் திமுகவால் பழிவாங்கப்பட்டு இருக்கிறார். 'அம்மா, சின்னம்மா' மீது திமுகதான் பொய்வழக்கு போட்டார்கள். என்னதான் அவர்கள் வழக்கு போட்டாலும், இருவரும் தெய்வத்தின் முன்னால் நிரபராதிகள். சசிகலா சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியே கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.