sasikala promises that dinakaran will be dismissed if he lose in rk nagar

சசிகலாவிடம் அனுமதி பெறாமலே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் தினகரன்.

குறிப்பாக, சசிகலா சிறையில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை கேட்பதையே தவிர்த்து விட்டார் தினகரன்.

மேலும், குடும்ப உறவுகளின் ஆதிக்கத்தை கட்சி மற்றும் ஆட்சியில் இல்லாமலே செய்துவிட்டு, அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் அவர்.

இதனால் திவாகரன் உள்ளிட்ட அவரது உறவுகள் அனைத்தும், உள்ளுக்குள் எரிமலையாய் புகைந்து கொண்டிருக்கிறது.

சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர், அவரது தம்பி திவாகரன்தான். ஆனாலும் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அதிரடியாக செய்யும் பேர்வழி.

அவரிடம் கட்சி மற்றும் ஆட்சியை ஒப்படைத்தால், சிக்கல் வந்துவிடும் என்று அஞ்சியே, தினகரனை துணை பொது செயலாளராக நியமித்தார் சசிகலா.

ஆனால் தினகரன் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோபத்தில் இருந்த திவாகரன் இதுவரை, சசிகலாவை சிறைக்கு சென்று பார்க்கவே இல்லை.

இந்நிலையில், தினகரன் ஒட்டுமொத்த ஆட்சி மற்றும் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சசிகலாவின் தடையமே தெரியாத அளவுக்கு செய்து விட்டார்.

இதனால் என்ன செய்வது? என்று யோசித்த திவாகரன், தமது மகன் ஜெய் ஆனந்தை பெங்களூரு அனுப்பி, தினமும் சசிகலாவிடம் வத்தி வைக்குமாறு அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.

இங்கே, தினகரன் ஆடும் ஆட்டம் அறிந்து கவலை கொண்டுள்ள சசிகலாவின் ஆத்திரத்தை, ஜெய் ஆனந்த் வைக்கும் வத்தி மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

ஒரு கட்டத்தில், என்னுடைய பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தேர்தலில் நிற்கிறான் தினகரன்.

அவன் மட்டும் இந்த தேர்தலில் தோற்கட்டும், உடனே அவனை துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விடுகிறேன்.

உன் தந்தை தினகரனிடம், கவலை படாமல் இருக்க சொல் என்று ஜெய் ஆனந்திடம் கூறி உள்ளார் சசிகலா.

இதனால் உற்சாகமாக இருக்கிறது திவாகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் என்கின்றனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.