சசிகலா முதல்வராக் வரவேண்டும் என்று அதிமுகவினர் ஓட்டியிருந்த போஸ்டரை கிழித்த நபரை பிடித்த அதிமுகவினர் அவரை அடித்து உதைத்து போலீஸ்ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுகவில் ஒவ்வொருவராக கூறத்துவங்கி தற்போது அதற்கும் அனைவரும் கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.
இந்த கோரிக்கையை முதன்முதலில் தீர்மானமாக போட்டது ஜெ.பேரவையினர். அதற்கு முழு ஆதரவு கொடுத்தவர் மதுசூதனன். வடசென்னையில் ஆர்.கே.நகரில் சசிகலா போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அங்குள்ள கட்சிக்காரர்களால் வைக்கப்படுகிறது.
ஆனால் அதே அளவுக்கு தொண்டர்களிடையே வெறுப்பும் உள்ளது. கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என ஆதரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வடசென்னை முழுதும் கிழிக்கப்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கட்சியினர் யார் கிழிப்பது எனபதை கண்காணிக்க துவங்கியிருந்தனர்.
இந்நிலையில் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ பேரவை சார்பில் இன்று ஆர் கே நகர் உள்பட வடசென்னையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி போஸ்டர்கள் தண்டையார்பேட்டையில் கிழிக்கப்பட்டிருந்தன.
சுவரொட்டிகளை கிழித்த நபரை அதிமுகவினரால் பிடித்தனர், பின்னர் அவருக்கு தர்ம அடிகொடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போஸ்டர் கிழித்த ஆசாமி சிக்கிய தகவல் கிடைத்தவுடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு அதிமுகவினர் குவிந்தனர்.
கிழித்த ஆசாமியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் தண்டையார் பேட்டை ஸ்டேஷன் வாசலில் பரபரப்பு ஏற்பட்டது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST