Asianet News TamilAsianet News Tamil

"அன்னிய செலாவணி வழக்கு விசாரணையில் முன்கூட்டியே கேள்விகள் வேண்டும்" - சசிகலாவின் மனுவால் கடுப்பான அமலாக்கத்துறை

sasikala plea HC to ask question before in FERA case
sasikala plea HC to ask question before in FETRA case
Author
First Published May 18, 2017, 12:18 PM IST


அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில்  கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று சசிகலா சார்பில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெ.ஜெ.டிவிக்கு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  சசிகலா, தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

sasikala plea HC to ask question before in FETRA case

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளாதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்குறிஞர் அனுமதி கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறையின் கேள்விகளை தனக்கு முன்கூட்டியகே தர வேண்டும் என சசிகலா சார்பில்  முறையிடப்பட்டது.

அதற்கு அமலாக்கத் துறை சார்பில் கடும் எதிர்ப்பு  தெரிவிக்கப்படுட்டதால் வழக்கை நீதிபதிகள் வேறு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்,
 

Follow Us:
Download App:
  • android
  • ios