சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டு 4 ஆண்ட் சிறை தண்டையை நிறைவு செய்ய உள்ள சசிகலாவுக்கு தேர்வு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

சிறையில் சசிகலா விவசாயம் செய்துள்ளார். சிறையில் கன்னடம் தெரியாததால் சக கைதிகளுடன் பேச சிரமபப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகள், ஊழியர்களுடன் பேச முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் கன்னடம் க்ற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பி இருக்கிறார். அதன்படி, கல்வி கற்காத கைதிகளுக்கு, கல்வி கற்பிக்க சிறைக்கு ஆசிரியர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை சசிகலா கற்று கொண்டுள்ளார். 

எழுதவும், பேசவும் விரைவாகக் கற்றுக்கொண்ட சசிகலா, கன்னட மொழித் தேர்வில், மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக பெங்களூர் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா மட்டுமல்லாமல் இளவரசியும் தற்போது கன்னடத்தில் பேசிவருகிறார் என்கிறார்கள். கன்னட மொழித்தேர்வில் மூன்றாம் நிலை வரை தேர்வெழுதி அதற்கான சான்றிதழ்களும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.