முதல்வர் ஜெ. மறைவுக்கு பின் அதிமுகவில் பொதுச்செயலாளராக பதவியேற்று கொண்டார். சசிகலா பதவியேற்ற உடனே அதிரடியாக 4ஆம் தேதி முதல் 9ஆம் வரை ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்திக்க போவதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம் 11 மணியளவில் தொடங்கியது.

இதற்காக கட்சி அலுவலகம் வந்த சசிகலா நிர்வாகிகளுடனான சந்திப்பை நடத்தினார்.

முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மட்டதினாலான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பன போன்ற கட்சி பணிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை சசிகலா நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இன்று தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டம் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.