காலை 7 மணிக்கு புறப்பட்ட சசிகலா, மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி கோயில், மயிலம் முருகப்பெருமான் கோயில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூருக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் அவர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். ஆனால், திடீரென அரசியலில் ஒதுங்குவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து, நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதனால், அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்தனர். ஆகையால், அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என குரல்கள் எழ தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க;- மார்ச் 20 , நினைவிடத்தில் அரசியல் முடிவை அறிவிக்கிறார் சசிகலா.? உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அலறும் இபிஎஸ்.

சுற்றுப்பயணம்
இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சசிகலா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்தவகையில், கடந்த 4ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு கோயில்களில் சாமி தரிசனம் செய்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்து பேசினார். இதனால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

சசிகலா திட்டம்
இந்நிலையில், சசிகலா இன்று சென்னையில் இருந்து காரில் தஞ்சாவூருக்கு புறப்பட்டார். காலை 7 மணிக்கு புறப்பட்ட சசிகலா, மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி கோயில், மயிலம் முருகப்பெருமான் கோயில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

வைத்திலிங்கத்தை சந்திக்க போகும் சசிகலா
தஞ்சை வரும் சசிகலா, பரிசுத்த நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். 2 நாள் தங்கும் அவர், ஆலங்குடி குரு பகவான் கோயில் உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார். மேலும், திருச்செந்தூரில் ஓபிஎஸ் தம்பி ராஜாவை சந்தித்து பேசியது போல், இங்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
