ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என அதிமுக பொது செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை வித்தித்து கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை செய்தது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ் மக்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டு விளையாட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.

தமிழ் மக்களின் ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் இயற்றவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால் தமிழக இளைஞர்கள் மகிழ்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.