sasikala in Global hospital
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் பரோல் கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பத்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சிறைத்துறை சில நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, சசிகலா கார் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கியிருந்த சசிகலா, இன்று தனது கணவரை பார்ப்பதற்காக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை சென்றார். அவர் செல்லும் வழி முழுவதும் அதிமுக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

சசிகலா, நடராஜனை சந்திக்கும் போது அவரால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேச வேண்டும் முடிந்தால் பேசவே கூடாது என மருத்துமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நடராஜன் சிசிச்சை பெறும் ICU விற்கு சென்று அவரை சந்தித்த சசிகலா தொடர்ந்து அவரிடம் நலம் விசாரித்தார்.
