சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று பிற்பகலில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னையுடன், சளி, காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது. ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால், ஆன்ட்டிபயாடிக் மற்றும் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார். சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.