sasikala getting angry about dinakaran activities

ஆட்சியையும் கட்சியையும் காவு கொடுக்கப் போகிறானா தினகரன்? என்று, தம்மை சந்தித்த இளவரசி மகன் விவேக்கிடம் கொந்தளித்திருக்கிறார் சசிகலா.

சசிகலா அன் கோ சிறைக்கு சென்றதில் இருந்து, அவர்களை பெங்களூரிலேயே தங்கி அடிக்கடி சந்தித்து வருபவர் இளவரசியின் மகன் விவேக் மட்டுமே.

விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு, இடைத்தேர்தல் ரத்து போன்ற காரணங்களால், கடும் அப்செட்டில் இருந்த சசிகலா, தம்மை சந்திக்க வந்த விவேக்கிடம், தினகரன் மீதான கடுமையான கோபத்தில் கொந்தளித்து இருக்கிறார்.

அவனை, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று எவ்வளவோ மன்றாடினேன். அவன் அதை கொஞ்சம் கூட கேட்கவில்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தெரியாமல் பணம் கொடுக்கும் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லை. அதனால்தான் மாட்டி கொண்டிருக்கிறான்.

எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மனம் போன போக்கில் செய்யும் அவனால், நான் விடுதலையாகி வருவதற்குள் கட்சியும், ஆட்சியும் காணாமல் போய்விடுமோ என்று பயமாக உள்ளது.

இதற்குத்தான், நான் இவ்வளவு கஷ்டப் பட்டேனா? இதெல்லாம் அவனுக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லையே. இந்த நேரத்தில் நான் அவன் மீது நடவடிக்கை எடுத்தால், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்படியே விட்டால், அவன் அடங்கமாட்டான். ஆகவே, அவனை உடனடியாக என்னை வந்து பார்க்க சொல் என்று, விவேக்கிடம் கூறி இருக்கிறார் சசிகலா.

இந்த தகவல், தினகரனுக்கு போய் இருக்கிறது. ஆனாலும், அவர் அதை பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை. 

சசிகலாவை அவர் எப்போது சந்திப்பர்? என்றும் தெரியவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.