Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவின் அடுத்த பிளான்… அதிர்ந்த இபிஎஸ்…. அமைதியான ஓபிஎஸ்…!

அதிமுகவின் முக்கிய தலைவர்களை தம் பக்கம் நோக்கி நகர வைக்கும் பிளான்களை சசிகலா கையில் எடுத்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் இபிஎஸ்சை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sasikala future plan
Author
Chennai, First Published Oct 30, 2021, 7:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சென்னை:  அதிமுகவின் முக்கிய தலைவர்களை தம் பக்கம் நோக்கி நகர வைக்கும் பிளான்களை சசிகலா கையில் எடுத்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் இபிஎஸ்சை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sasikala future plan

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் முடிந்து சென்னை வந்த நாளில் இருந்து சசிகலா பற்றிய செய்திகள் இல்லாமல் அதிமுக தலைவர்கள் எங்கும் பேட்டி கொடுப்பதில்லை. எக்காரணம் கொண்டும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று மேலிட உத்தரவின் பேரின் கருத்துகளும், பேட்டிகளும் வந்து கொண்டு இருக்கின்றன. அதை மவுனமாக பார்த்து கொண்டு இருந்தார்.

டெல்லி மேலிடத்தின் தொடர் நெருக்கடியால் என்னவோ.. ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அதற்கு டிடிவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவரின் இந்த முடிவை ஆதரவாளர்கள் பலர் ஏற்கவில்லை என்று கூறப்பட்டது.

Sasikala future plan

பின்னர் ஆன்மீக அரசியல், அப்புறம் ஆடியோ அரசியல் என்ற சசிகலா இப்போது தேவர் ஜெயந்தி மூலம் நேரடி அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து விட்டதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். மதுசூதனின் மறைவு, ஓ பன்னீர்செல்வம் மனைவி மரணம் ஆகிய நிகழ்வுகளில் அவர் தலைகாட்டியதை விட இப்போதைய அவரது செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பெங்களூரில் சிறைவாசம் முடிந்து சென்னை வந்த சசிகலாவுக்கும் கடந்த 2 வார காலமாக அனைவரும் பார்க்கும் சசிகலாவுக்கும் நிறைய மாறுதல்கள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அதாவது அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இருந்து தேவர் ஜெயந்தி வரையான நிகழ்வுகளை அவர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

Sasikala future plan

ஜெயலலிதா நினைவிடம், எம்ஜிஆர் இல்லம், தேவர் ஜெயந்தி ஆகிய மூன்றையும் இணைத்து பார்த்தால் அவர் எடுக்கக்கூடிய அரசியல் நகர்வுகளை பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரம் பயணத்தின் போது வழியில் சில இடங்களில் வாகனத்தை நிறுத்தி அங்கிருப்பவர்களை சந்தித்தார்.

போகும் வழியில் அதிமுக, அமமுக கொடிகளுடன் தொண்டர்கள் வரவேற்ற கோஷமிட்டதை ஒதுக்கிவிட முடியது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே… அதாவது அதிமுக தலைமை தேவர் ஜெயந்தியில் பங்கேற்காத தருணத்தில் உற்சாக வரவேற்பை கண்ட சசிகலா தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் தகவல்களை கசியவிட்டு உள்ளனர்.

Sasikala future plan

இனி அடுத்த கட்ட நகர்வு என்பது அதிமுக பொதுக்குழு என்பதை மூவரும் உணர்ந்துள்ளதாகவும், அதற்கேற்ப காய்கள் நகர்த்தப்படுகிறதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தமக்கான ஆதரவாளர்களையும் இப்போதே இழுக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த எடப்பாடி தரப்பு எப்படியும் எதிர்கொண்டு விடலாம் என்று துணிச்சலுடன் இருப்பதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருக்கும் ஓபிஎஸ் பிளான் என்னவாக இருக்கும் என்பதை அறியவும் இபிஎஸ் தரப்பு ஆர்வம் காட்டுகிறதாம். ஆனால் ஓபிஎஸ் தரப்போ நிதானமாக இருக்க வேண்டிய தருணம் என்று அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இபிஎஸ், ஓபிஎஸ் இவர்களின் நடவடிக்கைகள் இப்படி இருக்க…. சசிகலாவின் மூவ் வேறு ஒரு கோணத்தில் நடந்து கொண்டு இருப்பதாக கூறுகின்றனர். சூரியனை பார்த்து என்ற வார்த்தையை விரும்பாத அதே சமயத்தில் இபிஎஸ்சை ஆதரித்த முக்கிய நிர்வாகிகள், அதிமுக தலைமை மீது இந்த நிமிடம் வரை அதிருப்தியுடன் இருக்கும் முக்கிய தலைவர்கள், எடப்பாடியின் அரசியல் தந்திரத்தால் காணாமல் போனவர்களை கொக்கி போட்டு இழுக்க சசிகலா தரப்பு தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.

Sasikala future plan

இதற்கான பணிகளை முக்கிய நபர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் கன ஜரூராக நடந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆக மொத்தத்தில் சூரியனை பார்த்து என்ற வார்த்தையும், தேவர் ஜெயந்தியில் சசிகலாவுக்கு கிடைத்த வரவேற்பும் அதிமுகவில் புதிய நகர்வுகளை அரங்கேற்றும் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்…. வெகு விரைவில் தீபாவளி பட்டாசை விட வெளிப்படையான கருத்த மோதல்கள் அதிமுகவுக்குள் அரங்கேறலாம் என்பது தான் தற்போதைய நிலைமை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்…!

Follow Us:
Download App:
  • android
  • ios