Sasikala Dinakaran are guilty EPS - OPS advocate argument!

ஜெயலலிதா இறந்தபோது டி.டி.வி. தினகரன் அதிமுக உறுப்பினராகக்கூட இல்லை என்றும் சசிகலா, தினகரன் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்றும் ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்து வருகின்றனர்.

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சிஎஸ் வைத்தியநாதன் ஆஜராகி உள்ளனர். மேலும் வழக்கறிஞர்கள் விஜயகுமார், குரு கிருஷ்ணகுமாரும் ஆஜர்

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர். மைத்ரேயன், கே.பி.முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக்கூட இல்லை என்று வழக்கறிஞர்கள் வாதம் செய்து வருகின்றனர். டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இருவரும் கிரிமினல் வழக்கு பின்னணியில் உள்ளவர்கள்

இதனிடையே டிடிவி தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்டார் அதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டாம் எனவும், இரட்டை இலை முடக்கப்பட்டதால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்து வருகின்றனர்.