தோள் பட்டையில் எட்டி உதைத்து! ஜெ. ஆடையை கிழித்து தாக்கியபோது வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின்! சசிகலா பகீர்..!

கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்றைக்கு தமிழக அமைச்சராக இருப்பவர் தரையில் கூட நடக்காமல் மேஜை மீது ஏறி விலங்குகள் மரக்கிளைகளில் தாவுவது போல் ஒவ்வொரு மேஜையாக தாவி தாவியே ஜெயலலிதா  தோள் பட்டையில் எட்டி உதைக்கிறார். 

Sasikala condemns CM Stalin

தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதா சேலையில் கைவைத்து இழுத்தார். ஈவு இரக்கமின்றி ஜெயலலிதா ஆடையை கிழித்து அசிங்கப்படுத்திய கொடூரர்கள்தான் இன்றைக்கு பகல் வேஷம் போடுகின்றனர் என  சசிகலா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படும் ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்ட நாள். அன்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தினம். அன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல், வரலாற்றிலே எங்கும் கண்டிராத வகையில் திமுகவினரால் மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்டது.

இதையும் படிங்க;- ஜெ. மீது கொடூரமான தாக்குதல் நடந்தபோது நானும் அங்கு இருந்தேன்! உண்மையை மறைக்கும் ஸ்டாலின்! இபிஎஸ் விளாசல்.!

Sasikala condemns CM Stalin

அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அன்றைக்கு தோழமை கட்சியை சேர்ந்த குமரி ஆனந்தன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அதாவது காவல்துறையை தன் வசம் வைத்து இருந்த அன்றைய முதல்வர் கருணாநிதி செய்த சட்ட மீறல்களை சுட்டிக் காட்டி அதை முதலில் விவாதிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா எழுதிய ஒரு கடிதத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று கருதி 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி அதிகாலை எந்தவித காரணமும் சொல்லாமல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எனது இல்லத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே நுழைந்து தமிழக காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் வீட்டில் வைத்து இருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்து செல்கின்றனர். இதை செய்ய சொன்னவர் அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி அவர்கள். அவர்தான் அன்றைக்கு காவல்துறையையும் கையில் வைத்து இருந்தவர்.

Sasikala condemns CM Stalin

இது போன்று கருணாநிதி அவர்களால்  அன்றைக்கு அரங்கேற்றப்பட்ட ஒரு கிரிமினல் நடவடிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி அவர்கள். தான் செய்த தவறுகள் எங்கே வெளி வந்துவிடுமோ என்ற பயத்தில் சட்டசபையில் பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார். அப்போது தனக்கு எதிரே அமர்ந்து இருந்த ஜெயலலிதாவை நா கூசும் வார்த்தைகளால் வசை பாடுகிறார். அதனை தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சி உறுப்பினர்களும் அன்றைய அவைத்தலைவர் தமிழ்க்குடிமகன் அவர்களிடம் அவையை ஒத்திவைத்து கருணாநிதி அவர்கள் செய்ந அத்துமீறல்களை விவாதிக்கவேண்டும் என்று கோஷமிடுகின்றனர். இதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத நிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதாவை கொலைவெறியோடு தாக்கினர். முதலாவதாக திமுகவை சேர்ந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே. பழனிசாமி என்பவர் மேஜை மீது ஏறி ஜெயலலிதாவை தோள் பட்டையில் ஓங்கி உதைத்து அடிக்க பாய்கிறார். அப்போது கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்றைக்கு தமிழக அமைச்சராக இருப்பவர் தரையில் கூட நடக்காமல் மேஜை மீது ஏறி விலங்குகள் மரக்கிளைகளில் தாவுவது போல் ஒவ்வொரு மேஜையாக தாவி தாவியே ஜெயலலிதா  தோள் பட்டையில் எட்டி உதைக்கிறார். 

இதையும் படிங்க;-  துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சர்! சாட்சிகளை தன்னுடன் வைத்துக்கொண்டு பொய் பேசலாமா? டிடிவி. கேள்வி.!

Sasikala condemns CM Stalin

அப்போது நிலை தடுமாறி நாற்காலியில் சாய்ந்த  ஜெயலலிதா மீண்டும் எழுந்து நியாயம் வேண்டும் நியாயம் வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டே நிற்கிறார். அதன்பிறகு கோவை மு.கண்ணப்பன் ஓடி வந்து தாக்குகிறார். வீரபாண்டி ஆறுமுகம் ஜெயலலிதா முடியை பிடித்து இழுக்கிறார். ஜெயலலிதா மீது புத்தகங்களை எறிந்து தாக்குகிறார்கள். அச்சமயம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதா மீது புத்தகங்கள் விழாமல் இருப்பதற்காக எழுதும் அட்டையை வைத்து மறைத்து பாதுகாக்கிறார்கள். அப்போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து இருந்த திமுகவை சேர்ந்த நிர்வாகி, இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், கழகத்தினர் அனைவரையும் தாக்க சொல்லி கத்துகிறார். உடனே அங்கு இருந்த பொன்.முத்துராமலிங்கம் அவைத்தலைவர் மேஜையில் இருந்த பித்தளை மணியை எடுத்து ஜெயலலிதா மீது வேகமாக வீசுகிறார். கடவுளின் அருளால் ஜெயலலிதா தலையில் அது விழாமல் உயிர்பிழைத்தார்கள். இந்த கலவரத்திற்கிடையில் இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதா சேலையில் கைவைத்து இழுத்தார். ஈவு இரக்கமின்றி ஜெயலலிதா ஆடையை கிழித்து அசிங்கப்படுத்திய கொடூரர்கள்தான் இன்றைக்கு பகல் வேஷம் போடுகின்றனர்.

இதையும் படிங்க;-  ஜெயலலிதா சேலை பிடித்து உருவப்பட்டதா..? நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மையா? திருநாவுக்கரசர் பரபரப்பு விளக்கம்

Sasikala condemns CM Stalin

இதை தற்போது நாடகம் என்று சொல்லி திமுகவினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் நடந்தவை அனைத்தையும் சட்டப்பேரவையில் நின்று நேரில் வேடிக்கை பார்த்தவர் தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றுமே அறியாதவராக நிகழ்ந்த உண்மைகளை மறைக்க பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நடந்த உண்மைகள் அத்தனையும் இன்றைக்கும் தமிழக சட்டப்பேரவை குறிப்புகளிலும், அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த பத்திரிகைகளிலுமே சாட்சியாக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா எனது உடன் பிறவா சகோதரியாக என்னிடம் நடத்ததை அனைத்தையும் சொன்னதைத்தான் இப்போது நான் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறேன்.

Sasikala condemns CM Stalin

திமுகவினர் என்றைக்குமே பெண்களை மதிக்க மாட்டார்கள். அதை இன்றைக்கும் திமுகவில் இருக்கும் அமைச்சர்களே ஒவ்வொரு நாளும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் திமுகவின் அடக்குமுறைகளை வேரறுத்து அனைத்தையும் எதிர்கொண்டு தான் கட்சியையும் ஆட்சியையும் கொண்டு சென்றோம். இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில்தான் தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினோம். குறிப்பாக பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் எங்களது செயல்பாடுகள் அமைந்து இருந்தன. அதே வழியில்தான் நானும் இன்றுவரை பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

Sasikala condemns CM Stalin

எனவே திமுகவினர் பச்சை பொய் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். உண்மைகளை மறைத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உண்மைக்கு வலிமை அதிகம். அது என்றாவது ஒரு நாள் வெளியில் வந்தே தீரும். ஏதோ விதிவசத்தால் ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள். இதை நினைவில் வைத்து கொண்டு ஆட்சியில் இருக்கும் வரையாவது தமிழகத்திற்கு ஏதாவது நல்லதை செய்ய முயற்சியுங்கள் என்பதை இந்த ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios