ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினராக குறைந்தது 5 ஆண்டுகள் இருந்தால்தான் ஒருவர் கட்சிப் பதவியில் இருக்க முடியும் என அதிமுக சட்ட விதிகளில் உள்ளதால் சசிகலாவின் தேர்வு செல்லாது என பிரச்சனை எழுந்தது.

அப்போது சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓபிஎஸ் இடையே இருந்த இணக்கமான சூழல் பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்ஐ பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சசிகலா முதலமைச்சராக முயன்றார். ஆனால் ஓபிஎஸ் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தனியாக செயல்படத் தொடங்கினார்.

சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ஏராளமானோர் தற்போது ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அதில் முக்கியமானவர் காக அவைத்தலைவர் மதுசூதனன். இவர்தான் சசிகலாவை பொதுச் செயலாளராக முன்மொழிந்தவர்.

தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ள இவர் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளார்.

இந்த கடிதத்தை கோர்தல் ஆணையம் பரிசீலனை செய்தால் சசிகலாவுக்கு சிக்கல் வரும் என கருத்து நிலவி வருகிறது.