வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார் .  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை அண்ணா  திராவிடர் கழக பொதுச் செயலாளரான திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார் ,  அப்போது பேசிய அவர் திமுக அதிமுகவுடன் அமமுக போட்டி போட முடியாது என்றார்,   எல்லா வகையிலும் திமுக தமிழர்களுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் குரல் கொடுத்து வருகிறது என்றார். 

ஆகவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது ,  எந்த வகையில் யார் தமிழகத்துக்கு நல்லது செய்தாலும் நான் பாராட்டுவேன் அதேபோல் மத்திய அரசு செய்யும் அனைத்து காரியங்களும் மக்களை பாதிப்பதாக உள்ளது .  தமிழ் நாட்டிற்கு எதிராக உள்ளது .  மத்திய அரசு ஒரு கையில் இனிப்பையும் மற்றொரு கையில் விஷத்தையும் கொடுக்கிறது என்றார்,   மத்திய அரசால் அதிமுக கைகள் கட்டப்பட்டுள்ளது .  இதனால் மத்திய அரசை எதிர்க்க முடியாமல் அதிமுக உருமாறி உள்ளது .

அதேபோல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மிகப் பெரிய கொடுமையாகும் ,  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற இல்லை இப்போது இருக்கிற தமிழ எம்பிக்களுக்கு மதிப்பு இல்லை ,  தேவகவுடா எஸ்பி பிரதமராக இருந்தபோது தமிழக எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்டது, அதனால் தமிழக எம்பிக்களுக்கு அப்போது  மதிப்பு இருந்தது என்றார் .   அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியிருந்து திருத்தச்சட்டம் தேவையில்லாத ஒன்று எனவும்  அவர் தெரிவித்துள்ளார் .