Asianet News TamilAsianet News Tamil

இளவரசிக்கு சசி கொடுத்திருக்கும் அஸைன்மெண்டுகள்...! பரோலின் பின்னணி சடுகுடு!

பரப்பன அக்ரஹாரா சிறைப் பக்கமிருந்து ஒரு பறவை சென்னை நோக்கி வந்தாலே அது ஆயிரம் சேதிகளை தினகரன் அண்ட்கோவுக்கு சொல்லும்! சசியின் வலது கரமான இளவரசியே வெளியில் வந்திருக்கும் போது அஸைன்மெண்டுகள் இல்லாமலா இருக்கும்!?

Sasikala assignment...ilavarasi parole.....Background
Author
Chennai, First Published Oct 26, 2018, 3:19 PM IST

பரப்பன அக்ரஹாரா சிறைப் பக்கமிருந்து ஒரு பறவை சென்னை நோக்கி வந்தாலே அது ஆயிரம் சேதிகளை தினகரன் அண்ட்கோவுக்கு சொல்லும்! சசியின் வலது கரமான இளவரசியே வெளியில் வந்திருக்கும் போது அஸைன்மெண்டுகள் இல்லாமலா இருக்கும்!? Sasikala assignment...ilavarasi parole.....Background

தனது சகோதரர் வடுகநாதனின் உடல்நல குறைவை காரணம் காட்டி 15 நாட்கள் பரோலில் சிறை மீண்டிருக்கிறார் இளவரசி. அவரது மகன் விவேக் சென்று அழைத்து வந்திருக்கிறார். சென்னையை தவிர வேறெங்கும் செல்ல கூடாது, மீடியாவை மீட் பண்ணக்கூடாது, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது.’ என்று இளவரசிக்கு கடும் நிபந்தனைகள் இருக்கின்றன. Sasikala assignment...ilavarasi parole.....Background

ஆனால் தன் வீட்டுக்குள் உட்கார்ந்து அரசியல் பேசக்கூடாது! என்று எந்த கட்டளையும் இளவரசிக்கு இல்லையே. ஆம் கை நிறைய அஸைன்மெண்டுகளுடன் சென்னைக்கு வந்திருக்கிறார் இளவரசி. அவை அனைத்தும் அவரது அரசியல் அரசி சசிகலா டிஸைன் செய்து கொடுத்துள்ளவைதான். ஆளும் எடப்பாடியாரின் அரசையே உலுக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வழக்கு புஸ்ஸாகியிருக்கும் நிலையில் இளவரசி வெளிவந்துள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. Sasikala assignment...ilavarasi parole.....Background

இளவரசியின் கரங்களில் சசி கொடுத்தனுப்பியுள்ள அஸைன்மெண்டுகளில் பாதி, தினகரனுக்கானதுதானாம். என்னதான் 18 எம்.எல்.ஏ.க்களும் தினா தலைமையில் பரப்பன சென்று சசியை சந்திக்க இருக்கிறார்கள் என்றாலும் அங்கே வைத்து எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிட முடியாது, மேலும் மற்ற நபர்கள் இருக்கையில் தினகரனிடம்  சென்சிடீவான தகவல்களை பகிர்வதோ, அவரை கடிந்து கொள்வதோ சாத்தியமில்லை. எனவேதான் இளவரசியிடம் தகவல்களை சொல்லியனுப்பி உள்ளாராம் சசி. Sasikala assignment...ilavarasi parole.....Background

மேலும் சசி கேட்டனுப்பியுள்ள கேள்விகளுக்கு விளக்கங்களையும், சில மன்னிப்புகளையும் பரப்பன சிறையில் சசியை சந்திக்கும்போது தினகரன் தெரிவிக்க வேண்டும் என்பதும் உத்தரவு. குறிப்பாக எடப்பாடியார் மீதான ‘ஊழல் புகார்’ வழக்கு சி.பி.ஐ.யின் கைகளுக்கு மாறியிருக்கும் சூழலை அடிப்படையாக வைத்து மிக மிக முக்கியமாக சில தகவல்களை சசி கொடுத்தனுப்பியுள்ளார் இளவரசியிடம் என்கிறார்கள். Sasikala assignment...ilavarasi parole.....Background

இவை தி.மு.க.வுக்கு பெரிய பூஸ்டாக இருக்குமாம்! சி.பி.ஐ. அந்த வழக்கை விசாரிக்க துவங்கையில் தி.மு.க. தன் தரப்பை வலுப்படுத்தும் வகையில் சில பாயிண்டுகளை சசி சொல்லி அனுப்பியுள்ளார் என்கிறார்கள். இவை, ஜெ.,வின் கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு தெரியாமல், சசிக்கு மட்டும் தெரிந்த வகையில் எடப்பாடியாரின் நிர்வாக செயல்பாடுகளில் நடந்த அட்ஜெஸ்ட்மெண்டுகள் பற்றியவையாம். சசியை நம்பி அவற்றையெல்லாம் அப்போது தெரியப்படுத்தி இருந்தாராம் எடப்பாடியார். அவற்றையே இப்போது கத்தியாக்கி அவரை நோக்கியே நீட்ட இருக்கிறாராம் சசி. அவர் நமக்கு துரோகம் செய்தபோது நாம் ஏன் அதை திருப்பி செய்யக்கூடாது? என்பதே சசியின் கேள்வி. செம்ம லாஜிக்ல!

Follow Us:
Download App:
  • android
  • ios