Sasikala asks parole?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராஜனைப் பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவர
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது வழக்கறிஞர்கள் செய்து வருவதாக தெரிகிறது.
சொத்தக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு
வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து சசிகலா உள்ளிட்டோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்
நலக் குறைவு காரணமாக தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது நடராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், நடராஜனின் உடல்நிலையில்
முன்னேற்றம் இல்லை என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க, சிறை அதிகாரிகளிடம் பரோல் கேட்க
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் 10 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் சசிகலா கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிகிறது.
இதற்கான மனுவை சசிகலாவின் வழக்கறிஞர்கள் சிறை அதிகாரிகளிடம் விரைவில் தர உள்ளனர்.
