அதிமுகவை தொடர்ந்து கட்டுகோப்புடன் செயல்படுத்த சசிகலா கழகத்தின் பொது செயலாளராக பதவியேற்று கொள்ளவேண்டும் என முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் "ஜெயலலிதாவின் இறுதி வரை அவரது மெய் காப்பாளராக, உயிர் தோழியாக, உன்னத சேவகியாக, அவரது தங்கையாக சசிகலா வாழ்ந்து வருகிறார். 30 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து அவரது சிந்தனைகளை உள்வாங்கி இருப்பவர் - கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் வரை சசிகலாவை அறிந்து வைத்திருக்கிறார்கள் எனவே சசிகலதன் கழகத்தை கட்டு கோப்புடன் நடத்தி செல்ல முடியும் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் சோதனைகள் மற்றும் வேதனைகளில் உடனிருந்து உற்ற துணையாக துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் என குறிப்பிட்ட ஓபிஎஸ் ஜெ.வின் மராந்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப கழக முன்னணியினர் சசிகலாவை சந்தித்து தலைமையேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பொய்யான வதந்திகளை பரப்பி கழகத்தை முடக்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.