Asianet News TamilAsianet News Tamil

சசி வந்ததும் என்ன நடக்கும்?- பிக் பிரேக்கிங்க்காக காத்திருக்கும் தமிழகம்!

sasi come to chennai with barole
sasi come to chennai with barole
Author
First Published Oct 6, 2017, 11:25 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, மருத்ததுவமனையில்ன சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை சந்திக்க இன்று பரோலில் சென்னை வருகிறார். அவரை சந்திக்க அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பை கலங்க வைத்துள்ளதாக தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சில மாதங்அகளுக்ங்குகு முன்பு , அவருக்கு சிறை விதிமுறைகளை மீறி சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகவும்,    சிறையிலிருந்து வெளியே சென்றுவருவதாகவும்  எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராசன், உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன.

இதனிடையே  கணவர் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால்,  தனக்கு 15 நாட்கள் பரோல் வழங்கவேண்டும் எனக்கோரி கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா சில நாட்மகளுக்கு முன்பு  அளித்தார். ஆனால், அந்த மனுவில் போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அதனை கர்நாடக சிறைத்துறை நிராகரித்தது. மேலும், கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் சிறைத்துறை கூறியிருந்தது.

இதையடுத்து  சசிகலா தரப்பில் அவரது கணவர் உடல்நிலை குறித்த ஆவணங்களையும் சேர்த்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் கர்நாடக சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை சரியாக இருப்பதால் அதனை கர்நாடக சிறைத்துறை ஏற்றுக்கொண்டது. சசிகலாவை அழைத்து வருவதில் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக சென்னை காவல் துறையிடம் கர்நாடக சிறைத்துறை கருத்து கேட்டிருந்தது.

சசிகலாவை பரோலில் அழைத்து வருவது தொடர்பாகவும், பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாகவும், கர்நாடக அரசு கேட்டிருந்த 3 கேள்விகளுக்கு  தமிழக காவல்துறை தரப்பில் பதில்    அனுப்பப்பட்டுள்ளது .

இந்நிலையில், வியாழக்கிழமை கர்நாடகாவில் அரசு விடுமுறை என்பதால், சசிகலாவை பரோலில் விடுவிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில்  இன்று சசிகலா  பரோலில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னைக்கு  இன்று   சென்னை  வரும்  சசிகலா  முதலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவில்லத்தில்  அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின்  போயஸ்  தோட்ட  இல்லம்,   அரசு நினைவிடமாக   மாற்றப்படும் என  தமிழக அரசு  அறிவித்துல்லதால்  சசிகலாவால் அங்கு தங்க முடியாது.  அதனால், தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லம், அல்லது பெரும்பாக்கத்தில் சசிகலாவின் வாடகை இல்லத்தில் அவர் தங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது..

இதனிடையே, பரோலில் வெளிவரும்யா    சசிகலாவை அழைத்து வர டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போது   பெங்களூரில் உள்ளனர்.

பெங்ளூருவில் தற்போது கனமழை பெய்துவருவதால்   சசிகலாவை விமானம்மூலம் சென்னை அழைத்து சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னைக்கு வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை சந்தித்து நலம்விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

இதனிடையே  சசிகலா வேறுயாரையும் சந்திக்க கூடாது என சிறைநிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவை அதிமுக அமைச்சர்கள் நேரில் சந்திப்பார்களா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள்  சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே ரேநத்தில் சசிகலா வெளியில் வந்தால் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அவரை சென்று சந்திக்காமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே , சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா பரோலில் வந்தால் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இன்று மாலை சசிகலா சென்னை வரவுள்ள நிலையில் அவரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்  சென்று சந்திப்பார்களா ?  அப்படி சந்தித்தால் சசிகலா அவர்களிடம் என்ன சொல்வார்? எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது  ஒரு சிலர் வெளியேற வாய்ப்பு இருக்கும் ? அப்படி என்றால் இந்தஅரசு தப்பிப் பிழைக்குமா ?  என ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆம்...சசி   சென்னை  வந்ததும் என்ன நடக்கும்?- பிக் பிரேக்கிங்க்காக காத்திருக்கிறது   தமிழகம்!

Follow Us:
Download App:
  • android
  • ios