இது என்னமாதிரியான அண்டர்கிரவுண்ட் டீலிங் என்பது புரியவில்லை. ‘மெர்சல்’ படத்துக்குப் பண்ணிய அதே பப்ளிசிட்டி பணியை ‘சர்கார்’ படத்துக்கும் செய்யத்துவங்கியிருக்கிறார் மேடம் தமிழிசை. இன்று வாண்டட் ரவுடியாக வண்டியில் ஏறிய தமிழிசை ‘சர்கார்’ படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் காரசாரமாக பேட்டி அளித்துள்ளார். 

அவரது பேட்டியின் சாராம்சம் வருமாறு... ‘இன்று முதல்வர் பதவி ஆசையோடுதான் நடிக்கவே வருகிறார்கள். அப்படிப்பட்ட கனவோடு வருபவர்கள் சினிமாவில் மட்டும் முதல்வராக நடித்து விட்டுப்போகவேண்டியது தான். ஒரு காலத்திலும் அரசியலில் முதல்வர் ஆகமுடியாது.

சொந்தமாக கதை கூட பண்ணத்தெரியாமல், கள்ளக்கதையை படம்  எடுப்பவர்கள்தான் இன்று கள்ள ஓட்டைப்பற்றி படம் எடுக்கிறார்கள். இது கார்ப்பரேட்களின் காலம் அல்ல. காமன்மேன்களின் காலம். 

நடிகர் விஜயிடம் நேர்மை இல்லை. இனியாவது அவர் பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்’ என்று தனது முதல் கட்ட ‘சர்கார்’ விளம்பர சேவையை துவங்கியிருக்கிறார் மேடம் தமிழிசை. மெர்சல்’ படம் நாங்கள் ஏற்படுத்திய சர்ச்சையால் தேவையில்லாமல் ஹிட்டாகிவிட்டது. இனி விஜய் படங்களுக்கு வீண் விளம்பரம் தரமாட்டோம் என்று முன்பு யாரோ சொன்னதாக ஞாபகம்.