ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் பிரச்சனைகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

3 வருடங்களுக்கு ஒரு முறை இவர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வரைமுறை செய்யப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதியுடன் 12 வது ஊதிய ஒப்பந்த காலம் முடிவடைந்தது. புதிய ஓய்வூதிய ஒப்பந்தம் வரைமுறை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் 13 வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு எட்டாததையடுத்து போக்குவரத்து துறை தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

ஆனால் இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஊதிய உயர்வு,ஓய்வூதிய நிலுவை தொகை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து துறை தொழிலாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

மேலும் இத்தகைய முடிவு குறித்த அறிவிப்பை கடிதம் மூலம் போக்குவரத்து துறை செயலாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் பிரச்சனைகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.