அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுக ஆதரவாளரும் அதிமுக கூட்டணியில் உள்ள சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அலங்காநல்லூர்க்கு ஆதரவு தெரிவிக்க சென்றார்.

அப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வெளியேற சென்னார்கள், அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை உடனடியாக வெளியே செல்ல கோஷமிட்டனர். இதனால் அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.மேலும் அதிமுகவினர்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சேலம் தொப்பம்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம் இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்து உடனடியாக மதுரை அலங்காநல்லூர் வந்து சேர்ந்தார். அங்கு 2 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈட்டுபட்டு வரும் பல்லாயிர கணக்கான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஜிவிபிரகாஷ் போராட்ட களத்திற்கு வந்துடன் அப்பகுதியில் இருந்த ஆப்பாட்டகாரர்கள் ஆரவாரம் செய்தனர்.

மேலும் அலங்காநல்லூரில் செய்தி சேகரிக்கும் தந்தி தொலைக்காட்சி, அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜல்லிக்கட்டு நடத்த உடனடி சட்டம் நிறைவேற்ற திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கரூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் இளைஞர்களுடன் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.