நடிகர் ரஜினிகாந்துக்கு வரிச்சலுகை அளித்துள்ள வருமான வரித் துறையினர், நடிகர் விஜயை மட்டும் குறிவைப்பது ஏன்? என திமுக எம்.பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், ‘’தமிழ், தமிழ் என பேசிவரும் மத்திய அரசு தமிழுக்காக ஒன்றும் செய்யவில்லை. மாறாக, செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. ஆதார் என்னும் டைனமிக் தரவை வைத்துக்கொண்டு எதற்காக இப்போது என்.பி.ஆர்-ஐ செயல்படுத்துகிறீர்கள். பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா என்னும் இந்திய நிறுவனங்களைக் குறித்து பெருமையாக பேசியிருக்கிறீர்கள். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? அதை விற்கப்போகிறீர்கள். இப்போது எதை வைத்து பெருமைப்பட முடியும்? 

ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதை கருத்தில் கொண்டு, ரஜினிக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது’’என அவர் பேசினார்.