Asianet News TamilAsianet News Tamil

மதுவை விட கொடுமையானது சனாதனம்.. பாஜகவை போட்டு பொளந்த திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகளுடைய கருத்து  இலவசங்களையும் நிறுத்து என்பதுதான். கல்வியை மட்டும் கட்டணமில்லாமல் வழங்கிட வேண்டும் என்பது எங்களே கோரிக்கை இதை விடுதலை சிறுத்தைகளின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

Sanathanam is crueler than alcohol .. Thirumavalavan Directly attack bjp.
Author
Chennai, First Published Nov 27, 2021, 7:12 PM IST

மது என்பது சனாதனத்தை விட ஆபத்தானது  குடிப்பவர்களை மட்டும்தான் மது பாழ்படுத்தும், ஆனால் சனாதனம் ஒட்டுமொத்த குடியையே பாழ்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அது ஒட்டுமொத்த தேசத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அரசியலையும் தாண்டி சமூக நீதி, சனாதன எதிர்ப்பு என தனது இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து மனு தர்மத்தையும், அதை தழுவிய பாஜகவின் கொள்கைகளையும் எதிர்ப்பதில் முதல் ஆளாக இருந்து வருகிறார் அவர்.  மனு நூல் பெண்களை மிக மோசமாக சித்தரித்து இருக்கிறது என சமீபத்தில் அவர்  அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் திருமாவளவன் பெண்களை தவறாக பேசிவிட்டார் எனக்கூறி பாஜகவினர் அவருக்கு எதிராக பிரச்சாரத்தை கட்டமைத்தனர். ஒரு கட்டத்தில் அது பாஜகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதலாக மாறியது. கருத்தியல் ரீதியாக பாஜகவுடன் மோத தயார் என திருமாவளவன் சவால் விடுத்தார்.

Sanathanam is crueler than alcohol .. Thirumavalavan Directly attack bjp.

அதேபோல இந்துக் கோயில்கள் குறித்தும் அதன் சிலைகள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்துக்களையும் இந்து மக்களையும் இழிவாக பேசுவதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என பாஜக தலைவர்கள் திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் இயக்கம் வெறும் வாக்கு அரசியலுக்கானது மட்டுமல்ல, அது சமூகத்தை சீர்ப்படுத்தும் இயக்கம், சனாதனத்தில் இருந்து மக்களை மீட்சி செய்யவதற்கான  இயக்கம் என அவர்  பேசி வருகிறார். இதனால் பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே பகை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்னாள் தயாரிப்பாளரும், சொற்பொழிவாளரும், எழுத்தாளரும், கவிஞருமான கலைமாமணி முனைவர் பாலமுரளி நினைவேந்தல் நிகழ்ச்சி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்தது. பால ரமணி பிரபல தமிழ் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் துணைவர் ஆவர். தொலை திருமாவளவன் அந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விஜிபி குழுமத் தலைவர் விஜி சந்தோஷம் முன்னிலை வகித்தார்.

அதில் நாஞ்சில் சம்பத்,  கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், ஊடகவியலாளர் மெய்பா நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மதுவை ஒழிக்க குரல் கொடுக்க வேண்டும் என திருமாவளவனுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது, அதையொட்டி அவர் பேசியதாவது;- இந்த தூக்க நிகழ்விலும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள், அது 100 விழுக்காடு ஏற்றுக்கொள்ள வேண்டிய கோரிக்கை, அந்த கோரிக்கையை நான் வரவேற்கிறேன், வழிமொழிகிறேன், மது இந்த சமூகத்தை எப்படி பாழ்படுத்தி வருகிறது, அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, எவ்வளவு பெரிய ஆளுமை மிக்கவர்களைகூட சீரழித்துக் கொண்டிருக்கிறது, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இளைஞர்களை அது காயடித்துக் கொண்டிருக்கிறது. முப்பது வயதை கூட தாண்ட முடியாமல் எத்தனையோ பேர் விழுந்துபோகிறார்கள். அரசுக்கு வருமானம் வேண்டும், அதை வைத்துதான் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நியாயப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 

Sanathanam is crueler than alcohol .. Thirumavalavan Directly attack bjp.

விடுதலைச் சிறுத்தைகளுடைய கருத்து  இலவசங்களையும் நிறுத்து என்பதுதான். கல்வியை மட்டும் கட்டணமில்லாமல் வழங்கிட வேண்டும் என்பது எங்களே கோரிக்கை இதை விடுதலை சிறுத்தைகளின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மது ஒழிப்புக்காக பல இயக்கங்களை முன்னெடுத்திருக்கிறோம். இன்னும் ஒரு படி மேலே போய், மது ஒழிப்புக் கொள்கையை, மதுவிலக்குக் கொள்கையை தேசிய கொள்கையாக அரசு அறிவிக்க வேண்டும், அது மாநில கொள்கையாக மட்டும் இருக்கக்கூடாது எனபதே எங்கள் கொள்கை. ஆனால் இங்கு மதுவைவிடவும் கொடியது சனாதன அரசியல், மது என்பது குடிப்பவர்களை மட்டும்தான் பாழ்படுத்தும், ஆனால் சனாதனம் குடியையே பாழ்படுத்தும். அது இந்த தேசத்தையே பாழ் படுத்திக் கொண்டிருக்கிறது. சனாதனம் என்பது ஏதோ இந்து சமூகத்தை எதிர்ப்பது அல்ல, அதன் கோட்பாட்டைதான் நான் குறிப்பிடுகிறேன். பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது தான் சனாதனம், சனாதனம் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் முடிவில்லாதது, அழிவில்லாதது என்று அர்த்தம். எனவே பிறப்பின் அடிப்படையில் எல்லோரும் சமம் இல்லை என்பதுதான் சனாதனம்.

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மறுப்பதுதான் சனாதனம். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மறுத்தால் அங்கு சமூகநீதிக்கு இடமில்லை. சமூக நிதி இல்லை என்றால் விளிம்புநிலை மக்கள் அதிகார வலிமை பெற முடியாது, விழுந்தவர்கள் எழுந்திருக்க முடியாது, எனவே விளிம்பு நிலை மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்றால் அங்கு சமூக நீதி தேவை. சமூக நீதி வேண்டும் என்றால் அங்கு சனாதனம் இருக்கக் முடியாது இவ்வாறு அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios